News 5 - (03-07-2024) ஹத்ராஸ்: கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழப்பு!

News 5
News 5

1. இன்று முதல் ரீசார்ஜ் கட்டண உயர்வு அமல்!

Airtel and Vodofone
Airtel and Vodofone

இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களான airtel மற்றும் vodafone ஆகிய நிறுவனங்கள், கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்தது. இந்நிலையில் சுமார் 47 கோடி மொபைல் சந்தாதாரர்களுடன் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் ஜியோ நிறுவனம் 12 முதல் 27 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் 10 முதல் 21 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியது. இந்நிலையில் தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் புதிய ரீசார்ஜ் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் வோடபோன் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2. ஹத்ராஸ்: கூட்ட நெரிசலில் சிக்கி 121 உயிரிழப்பு!

Hathras
Hathras

உத்தரபிரதேசம்: நேற்று  சமய போதகர் எனக்கூறப்படும் போலே பாபாவின் ' சத்சங்கிற்காக' சிக்கந்தராவ் பகுதியில் உள்ள புல்ராய் கிராமத்திற்கு அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 121 பேர் உயிரிழந்துள்ளனர். மிகவும் துயரமான சம்பவமாக கருதப்படும் இந்த உயிரழப்புகளுக்கு, பல நாடுகளின் தூதர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பலரின் உடல்கள் ஹத்ராஸ் அரசு மருத்துவமனையின் உள்ளே பனிக்கட்டிகளின் மீது அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

3. இலங்கையைச் சேர்ந்த வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!

Srilankan players
Srilankan players

இலங்கையைச் சேர்ந்த இரு வீரங்கனைகள் இவ்வாண்டு பிரான்ஸின் தலைநகரான பாரீஸில்  நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இலங்கையின் இளம் வீராங்கனையான தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்ட போட்டியில் தகுதி பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் தில்ஹானி லேகம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் .

4. சென்னையில் த.வெ.க கல்வி விருது விழா... அதிகாலையே என்ட்ரி தந்த விஜய்!

Vijay
Vijay

இன்று சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் இரண்டாம் கட்டமாக கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக த.வெ.க. தலைவர் விஜய் அதிகாலையே நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வருகை தந்தார். இன்று 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் உதவி தொகையை விஜய் வழங்க உள்ளார். 740 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளனர்.

5. ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

Charger
Charger

அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் அனைத்து ப்ராண்ட் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், ஐபேடுகள் போன்றவற்றில் பொதுவான சார்ஜ் போர்டாக டைப்-சி போர்டையே பயன்படுத்துவதை கட்டாயமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com