கமலா ஹாரிசுடன் அதிபர் தேர்தலுக்கான நேரடி விவாதத்தில் செப்டம்பர் 4-ஆம் தேதி பங்கேற்க இருப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் ஃபாக்ஸ் நியூஸ் சார்பில் அதிபர் வேட்பாளர்களின் நேரடி விவாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையப் பயணத்துக்கு இந்தியாவில் இருந்து சுபான்ஷு சுக்லா தேர்வாகியுள்ளார். மாற்று வீரராக பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் வில்வித்தை போட்டியில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மன் வீராங்கனையை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.
ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘BROTHER' திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் 25 மீ ஏர் பிஸ்டல் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் 4 ஆம் இடம் பிடித்து வெளியேறினார் இந்திய வீராங்கனை மனு பாக்கர். 10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்ற நிலையில் மூன்றாவது பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டத்தை அடுத்து, 4 ஆம் இடம் பிடித்து வெளியேறியுள்ளார்.