News 5 – (03-09-2024) பொதுமக்களிடையே 2000 ரூபாய் நோட்டுகள் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

News 5
News 5

1. 6,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம்!

A bridge built 6,000 years ago
A bridge built 6,000 years ago

கடந்த 2000 த்தில் பிரான்சின் மல்லோர்கா தீவில் நீருக்கடியில் மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 25 அடி நீளமுள்ள சுண்ணாம்புக்கல் பாலம் குறித்து 24 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர்.

தற்போது, அந்த குகைப்பாலம், 6,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாலத்தின் மீது படிந்த கனிமங்கள் மற்றும் கடல் நீர் மட்டத்தின் அதிகரிப்பைக் கணக்கிட்டு, பாலத்தின் வயதை கணக்கிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

2. புருணை செல்லும் பிரதமர் மோடி!

Prime Minister Modi is going to Brunei
Prime Minister Modi is going to Brunei

புருணை சுல்தானின் அழைப்பை ஏற்று, 3 நாள் பயணமாக புருணை மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இன்று புறப்படுகிறார் பிரதமர் மோடி. அந்நாட்டு அரசுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

3.  2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் இருக்கிறது - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

2000 rupees - RBI
2000 rupees - RBI

7,261 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தகவல் அளித்துள்ளது. மேலும் கைவசம் உள்ள நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

4. 'கூலி' படத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை அறிவித்த படக்குழு!

Cooli movie
Cooli movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த வாரம் முழுவதும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்திருந்தது. அதன்படி இதுவரை சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகின. அந்தவகையில், தற்போது இப்படத்தில் ரஜினிகாந்த் கதாப்பாத்திரத்தின் பெயர் 'தேவா' என அறிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது படக்குழு.

5. பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் 15 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா!

 Paris Paralympics
Paris ParalympicsCredits: Firstpost

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இதுவரை 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களைக் இந்திய வீரர்- வீராங்கனைகள் கைப்பற்றியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com