News 5 – (03-09-2024) பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால், மரண தண்டனை!

News 5
News 5

1. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால், மரண தண்டனை!

Mamata Banerjee
Mamata BanerjeeMamata Banerjee

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால், மரண தண்டனை விதிக்கும் புதிய மசோதா மேற்கு வங்க சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆளுநரிடம் பேசி ஒப்புதல் வாங்கித்தரும்படி, பாஜக எதிர்க்கட்சித் தலைவரிடம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

2. பட்டமளிப்பு விழா!

Anna university
Anna university

சென்னை பல்கலைக்கழகத்தின் 166 -வது பட்டமளிப்பு விழா இந்த மாத இறுதி வாரத்தில் நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமார் 50,000 மாணவர்கள் பட்டம் பெறாமல் இருந்த நிலையில், தற்போது இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டமளிப்பு விழா  துணைவேந்தர் இல்லாமலேயே நடைபெறும் என கூறப்படுகிறது.

3. ரேஷன் கடைகளில் பொருட்கள் மறுப்பதாக பரவி வந்த தகவல் தவறானது!

Rasan shop
Rasan shop

ஆதாரில் கைரேகையை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷன் கடைகளில் பொருட்கள் மறுப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், அந்த தகவல் தவறானது. ஆதாரை புதுப்பிப்பதற்கும், ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என உணவு பொருள் வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளது.

4. தீபாவளியில் வெளிவரும் திரைப்படங்கள் Amaran VS Bloody Beggar!

Amaran VS Bloody Beggar!
Amaran VS Bloody Beggar!

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

அதேபோல், நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ‘BLOODY BEGGAR’ படமும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

5. பாராலிம்பிக் நீச்சல் போட்டியில், உலக சாதனை!

 Paralympic swimming
Paralympic swimming

பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் இத்தாலி வீரர் சிமோன் பர்லாமின் உலக சாதனை படைத்துள்ளார். போட்டி தூரத்தை 23.9 வினாடிகளில் நீந்திச் சென்று தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com