அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அங்கு பிரதமர் மோடி முன்னிலையில் செமிகண்டக்டர், டிஜிட்டல் தொழில்நுட்பம், கிளஸ்டர் மேம்பாடு, குறைக்கடத்தி வடிவமைப்பு உள்ளிட்ட துறை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் செயலியில், ஸ்டோரிக்கு ரிப்ளை செய்யும் ஆப்ஷன் மட்டும் இருந்த நிலையில், ஸ்டோரியில் கமெண்ட் செய்யும் புதிய அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம்.
பயனர்களிடையிலான தொடர்பை அதிகரிப்பதற்காக இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வேண்டாம் என நினைப்பவர்கள் இந்த ஆப்ஷனை DISABLE செய்துக்கொள்ள முடியும்.
"மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இவை அடுத்த 2 தினங்களில் வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர கூடும்" என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
திரைக்கு வந்த முதல் நாளே டெலிகிராம் பக்கத்தில் சட்டவிரோதமாக 'தி கோட்' திரைப்படம் வெளியானதாக கூறப்படுகிறது. சிறப்புக்காட்சி உட்பட 2 காட்சிகள் முடிந்த நிலையில், சட்டவிரோதமாக இணையத்தில் படம் வெளியாகியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட, டிம் சௌதி தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வருகை தர உள்ளது. வரும் 9ம் தேதி நொய்டாவில் இந்த டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.
அதன் பின்பு, இலங்கை செல்லும் நியூசிலாந்து அணி, மீண்டும் அக்டோபரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.