இந்தியாவால் மட்டும் தான் இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதர் இரஜ் இலாஹி தெரிவித்துள்ளார்.
ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகளாக பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த பிரேசிலை சேர்ந்த முதியவர் வால்டர் ஒர்த்மேன் (102) காலமானார். தனது 15 வயதில் குடும்ப சூழல் காரணமாக ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இவர்,100 வயது வரை அதே நிறுவனத்தில் உழைத்து பணி ஓய்வு பெற்றுள்ளார்.
"காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் பள்ளி வருகை அதிகமாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகமாகியுள்ளது. கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம் மூலம் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகியுள்ளது. புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் உயர்த்தியுள்ளது” என மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
சினிமா தொடர்பான பணிகள் இருப்பதன் காரணமாக வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத சூழல் இருப்பதாகவும், அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச்சுற்றில் 89.34 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. இவர் கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.