அமெரிக்காவின் Dell நிறுவனத்தின் விற்பனை பிரிவில், செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய உள்ளதால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 12,500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
வங்கதேச வன்முறைச் சம்பவங்களால் விமான சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் வங்கதேசத்தில் இருந்த 205 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு உள்ள 660 இடங்களில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்களும், மீதமுள்ள 597 இடங்கள், தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 17,497 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
அமெரிக்கா நாட்டின் சின்னமாக உள்ள வெள்ளைத்தலை கழுகு, அந்நாட்டின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைத்தலை கழுகை தேசியப் பறவையாக அறிவிக்கும் மசோதா, செனட் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஒலிம்பிக் உயரம் ஏறும் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் வாட்ஸன் அரையிறுதிக்கு முன்னேறினார். இவர் இந்த போட்டியில், 15 மீட்டர் உயரமுள்ள சுவரில் 4.75 வினாடிகளில் ஏறி உலக சாதனை படைத்துள்ளார்.