News 5 - (08-07-2024) பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு... உச்சநீதிமன்றம் கருத்து!

News 5
News 5

1. இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு!

landslide
landslide

இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் உள்ள கோரோண்டாலோ என்ற பகுதியில், சட்டவிரோதமாக தங்கச் சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது. சுரங்கத்தில் உள்ள சிறு குழிகளில், 30க்கும் மேற்பட்டோர் இறங்கி தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 18 பேர் மாயமாகி உள்ளனர்.

2. பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!

Periods leave
Periods leave

"பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது கட்டாயம் என அறிவித்தால் அவர்களை வேலைக்கு எடுப்பது குறையக்கூடும். பெண்களை பாதுகாப்பதற்காக எடுக்கும் நடவடிக்கை அவர்களுக்கு பாதகமாகிவிடக் கூடாது"  என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

3. சென்னை மாநகர புதிய காவல் ஆணையர் நியமனம்!

POlice arun
POlice arun

சென்னையில் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருணை சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக தமிழக அரசு இன்று நியமித்துள்ளது. சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் இன்று பொறுப்பேற்றிருக்கிறார்.

4. 'மகாராஜா' திரைப்படம் நெட் பிளிக்ஸ்-ல் வெளிவர உள்ளது!

Maharaja
Maharaja

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் மகாராஜா திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி திரையில் வெளியாகியது. 100 கோடி வசூல் சாதனை செய்த இந்த திரைப்படம் ஜூலை 12 முதல் நெட் பிளிக்ஸ்-ல் வெளியாகும் என கூறப்படுகிறது.

5. டி20 உலகக் கோப்பை பரிசு தொகை!

t20
t20

டி20 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அறிவித்த ரூ.125 கோடியில், ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாத 3 பேர் உட்பட 15 வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு தலா ரூ.5 கோடி வழங்கப்படும்; மற்ற முக்கிய பயிற்சியாளர் குழுவிற்கு தலா ரூ.2.5 கோடி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com