வங்கதேசத்தில் வன்முறைச் சூழல் காரணமாக, தலைநகர் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பெரும்பாலான ஊழியர்கள் தாய்நாடு திரும்பியதையடுத்து, அங்கு அனைத்து இந்திய விசா மையங்களும் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 9-ஆக குறைக்க சட்டத்திருத்தம் கொண்டு வர ஈராக் அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவிற்கு, பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை நகரில் ஆங்காங்கே கொட்டப்படும் கட்டடக் கழிவுகளால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதுடன், மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வெளியேறாமல் தடைபடுவதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், 'அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகள் அருகே கட்டடக் கழிவுகளைக் கொட்டினால் 5000 வரை அபராதம் விதிக்கப்படும்' என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' திரைப்படம் நாளை முதல் திரைக்கு வரும் நிலையில், இன்று முதல் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் மகளிர் 57 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீராங்கனை அன்சு மாலிக் அமெரிக்கா வீரங்கனையிடம் தோல்வி அடைந்தார்.