ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 'பிரீஸ்டைல்' 50 கிலோ பிரிவில் இந்தியாவின் வீராங்கனை வினேஷ் போகத், முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனையான ஜப்பானின் யுய் சுசாகியை வீழ்த்தி, ஒலிம்பிக் மல்யுத்த ஃபைனலுக்கு முன்னேறினார்.
ஃபைனலில் இருமுறை வீராங்கனைகளின் எடை சோதிக்கப்பட்ட போது வினேஷ் போகத்தின் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால், சர்வதேச மல்யுத்த சங்கம் அவரை தகுதி நீக்கம் செய்தது. இந்நிலையில் தன்னை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து Court of Arbitration for Sports எனப்படும் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், இன்று ஹரியானா அரசு, பதக்கம் பெற்ற வீராங்கனைக்கு அளிக்கப்படும் மரியாதையுடன் வினேஷ் போகத்தை வரவேற்க வேண்டும் எனவும் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்திற்குரிய விருதுகளும், சலுகைகளும் வினேஷ் போகத்கு வழங்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
ஈரானில் ஒரே நாளில் 29 கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக போராடுவோரை அச்சுறுத்த, மரண தண்டனையை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக நார்வே மனித உரிமை அமைப்பு இதை எதிர்த்து குற்றம்சாட்டியுள்ளது.
நீட் முதுநிலை தேர்வுக்கான வினாத்தாள் விற்பனைக்கு உள்ளதாகக் டெலிகிராமில் தகவல் பரவி வருகிறது. 70,000 ரூபாய்க்கு வினாத்தாள் கிடைப்பதாக PG NEET leaked materials என்ற குழுவில் பதிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்து, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் டெலிகிராமில் வினாத்தாள் வெளியாகவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூபாய் 1.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இறகு பந்து உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
1997ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி வென்றுள்ளது. இலங்கை அணி 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2-0 என்ற கணக்கில் வென்றது.