News 5 – (09.10.2024) 'வேட்டையன்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி!

News 5
News 5

1. வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Nobel Prize in Chemistry  - 3 Members
Nobel Prize in Chemistry

ண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சேவையாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் பொது சேவையில் மிகச்சிறந்த முறையில் பங்காற்றுவோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு, 'புரதத்தை கட்டமைத்தல்’ ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

2. கொடைக்கானல் ‘பேரிஜம்’ ஏரிக்கு செல்லத் தடை!

Kodaikanal Barijam Lake
Kodaikanal Barijam Lake

கொடைக்கானல் ‘பேரிஜம்’ ஏரியில் காட்டு யானைகள் முகாமிட்டு இருப்பதால் பேரிஜம் ஏரிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி மறு உத்தரவு வரும் வரை யாரும் அங்கு செல்லக்கூடாது என தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

3. கூடுதலாக 25 தாழ்தள பேருந்துகள் இயக்கம்!

25 additional low-floor buses
25 additional low-floor buses

சென்னை மாநகரில் கூடுதலாக 25 தாழ்தள பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார். சென்னையில் ஏற்கெனவே 188 தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் 22 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான 25 புதிய தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
News 5 – (09.10.2024) ரஜினியுடன் நடிக்க அமிதாப்பச்சன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
News 5

4. 'வேட்டையன்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி!

Rajini's Vettaiyan
Rajini's Vettaiyan

ஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாக உள்ள 'வேட்டையன்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை 'வேட்டையன்' படம் கூடுதலாக ஒரு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5. ‘கம்பீர்தான் காரணம் எனச் சொல்வது, அவரது காலை நக்குவதற்கு சமம்’ - சுனில் கவாஸ்கர்!

 Sunil Gavaskar, Rohit, Gambhir
Sunil Gavaskar, Rohit, Gambhir

"ங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அதிரடியாக விளையாடியதற்கு பயிற்சியாளர் கம்பீர்தான் காரணம் எனச் சொல்வது, அவரது காலை நக்குவதற்கு சமம். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே இந்திய அணி அதிரடியாகவே விளையாடி வருகிறது. இதற்கு முழு காரணம் ரோகித் ஷர்மாதான்" என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com