பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வெற்றி பெரும் வீரர்களுக்கு ஈபிள் டவரின் பழைய இரும்பு பாகங்கள் பொறிக்கப்பட்ட சிறப்பு தங்க, வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஒலிம்பிக் தொடரில் ஸ்ட்ரீட் ஸ்கேட் ஃபோர்ட் பிரிவில், வெண்கலம் வென்ற அமெரிக்க வீரர் ஹூஸ்டன் தான் வாங்கிய பதக்கம், வாங்கும் போது பளபளப்பாக ஜொலித்ததாகவும், வீட்டிற்கு எடுத்துவந்து ஒரு வாரத்தில் அதன் பளபளப்பு தன்மை நீங்கி வெளுத்து விட்டதாகவும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட ஒலிம்பிக் பதக்கத்தின் தற்போதை நிலை குறித்த புகைப்படம் மற்றும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரேசில் பரானா மாகாணத்தில் உள்ள கேஸ்கேவலில் இருந்து கேரோலியோஸ்-ல் உள்ள சாவ் பாலோ சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ATR 72-500 பயணிகள் விமானம், திடீரென வானில் வட்டமடித்தபடி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 57 பயணிகள் உட்பட 4 விமான நிறுவன ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூரில் உலகப் பழங்குடியினர் தினத்தையொட்டி நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், திமுக அரசை ஆயிரம் ரூபாய் அரசு என விமர்சித்ததோடு, இளைஞர்கள் 'நாம் தமிழர்' கட்சிக்கு அளிக்கும் வாக்குகளைப் பறிக்கவே தமிழ்நாடு அரசு தமிழ்ப் புதல்வன் திட்டத்தைத் தொடங்கியுள்ளது என சீமான் கூறியுள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகை சுஹாசினி, நடிகை குஷ்பு, நடிகை மீனா, நடிகை லிசி உள்ளிட்டோர் கேரள முதல்வரை சந்தித்து, ஒரு கோடி ரூபாய்கான நிவாரண நிதி காசோலையை வழங்கினர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெ ராவத், போர்ட்டோரிக்கா வீரர் டாரியன் க்ரூஸை 13-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெண்கலம் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 5 வது வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. இத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலத்துடன் 6 பதக்கங்களை பெற்றுள்ளது.