யூடியூப்-ன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி (56), கடந்த 2 ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். 1990-களில் இருந்து கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், 2014 முதல் 2023 வரை யூடியூப்-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இருசக்கர வாகன சந்தையில் சீனாவை இந்த ஆண்டில் இந்தியா பின்னுக்குத் தள்ளும் என கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் (Counterpoint Research Institute) கணித்ததோடு, உலகின் மொத்த இருசக்கர வாகன சந்தையின் 35 சதவிகித பங்குடன் இந்தியா முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.
வடபழனியில் சொமாட்டோ நிறுவன டெலிவரி ஊழியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர், "உணவு டெலிவரி செய்யும் பணியாளர்கள் தங்களின் நேரத்தை விட, உயிர் முக்கியம் என்பதை உணர்ந்து சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் 3-ம் பாகத்திற்கு fire and ash என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் அடுத்தாண்டு டிசம்பரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜுக்கு ஐதராபாத்தில் நிலம் பரிசாக வழங்கப்படுகிறது. 5,400 சதுர அடி கொண்ட நிலத்தை ஒதுக்கியதற்கான உத்தரவை தெலங்கானா அரசு வெளியிட்டுள்ளது.