News 5 - (12-07-2024) 'ஒருமுறையாவது சிரிக்க வேண்டும்' - ஜப்பான் சட்டம்!

News 5
News 5

1. 'ஒருமுறையாவது சிரிக்க வேண்டும்' - ஜப்பான் சட்டம்!

laugh - Japan Law
laugh - Japan Law

ஜப்பானில்  யமகட்டா மாகாணத்தில் வசிக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டடுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை, சிரிப்பு தினமாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

தினமும் சிரித்தால் மன அழுத்தம், பதற்றம் குறைந்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்ற யமகட்டா மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2. கள்ளச்சாராய ஒழிப்பு மசோதா - ஆளுநர் ரவி ஒப்புதல்!

R.N.Ravi
R.N.Ravi

கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ₹10 லட்சம் வரை அபராதம் விதிக்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

3. "SI முதல் DSP வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருப்பது அவசியம்!” - என டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்!

DGP Davidson Devasirvadam!
DGP Davidson Devasirvadam!

தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் DSP-க்கள் வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்படும். இனி, காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள், இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி-க்களின் பணித்திறனுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

4. 'மக்கள்தொகை அதிகரித்து குறையும்' - ஐ.நா அறிவிப்பு!

Population
Population

இந்தியாவின் மக்கள்தொகை 2062-ஆம் ஆண்டில் 170 கோடியாக உச்சத்தை தொடும் என ஐ.நாஅறிக்கையில் கூறப்படுகிறது. இந்திய மக்கள் தொகை முதலில் அதிகரித்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு குறையத் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

5. "Logic இல்லாத கதை, கதையே இல்லாத பிரமாண்டம்" - இயக்குநர் அமீர்!

Director Amir
Director Amircredits : Wikipedia

ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் 1996ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'இந்தியன்' படத்தின் 2ம் பாகம் இன்று திரையில் வெளியானது. சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த 'இந்தியன்2' திரைப்படத்தை பார்த்த இயக்குநர் அமீர், "Logic இல்லாத கதை; கதையே இல்லாத பிரமாண்டம். கமல் எனும் பிறவிக் கலைஞனுக்கு வாழ்த்துகள்" என பாராட்டியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com