அக்டோபர் முதல் மாணவர்களுக்கான விசா கட்டணத்தை நியூசிலாந்து அரசு இரட்டிப்பாக்க இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடுகையில் விசா கட்டணம் 40 சதவீதம் குறைவு என்பதால் மாணவர் சேர்க்கையை பாதிக்காது என நம்பப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான சிறந்த மாநில பல்கலைக்கழகங்களின் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் தேசிய அளவிமுதலிடம் பிடித்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனால் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையில் மின்சார ரயில் மற்றும் நெடுந்தூர மின் தொடர் ரயில்கள் அங்கு நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 18-ம் தேதி முற்பகல் வரை ரத்து செய்யப்பட்ட ரயில் சேவை, பிற்பகலுக்கு மேல் தொடங்கும் எனவும் கூறியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெற உள்ளது. அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாணயத்தை வெளியிடுகிறார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் கருணாநிதி நூற்றாண்டு நினைவாக ரூ.100 நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'கங்குவா' படத்தை தயாரித்துள்ள ஞானவேல் ராஜா, விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தையும் தயாரித்திருப்பதால், ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் 'தங்கலான்' படத்துடன் கங்குவா டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். தங்கலான் படத்தின் இடைவெளியின் போது கங்குவா டீசர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விக்ரம் நடித்துள்ள தங்கலான் மற்றும் சூர்யாவின் கங்குவா ஆகிய படங்களை வெளியிடும் முன் தலா 1 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான காரணங்கள் விரைவில் தெரியவரும்.