2 ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன் - ரஷ்யா போர் நீடித்துவரும் நிலையில், முதன்முறையாக ரஷ்யாவுக்குள் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு உக்ரைன் படைகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணம் மீது கடந்த செவ்வாய் கிழமை முதல் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்துகின்றன. உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படைகளை பின்வாங்கச் செய்யவே எல்லை தாண்டி சென்று தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுமக்கள் 76,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், கடந்த 5 நட்களில் உக்ரைன் வீரர்கள் 1,100 பேர் கொல்லப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து, வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா "பதக்கம் இல்லை என்றாலும் நாட்டிற்காக வினேஷ் போகத் செய்ததை மறந்து விடாதீர்கள். வீரர்கள் பதக்கம் வென்றால் சாம்பியன்கள் என நம்மை கொஞ்ச காலத்திற்கு ஞாபகம் வைத்திருப்பார்கள். ஆனால் பதக்கம் வெல்லவில்லை என்றால் மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் நாட்டிற்காக வினேஷ் போகத் செய்ததை மறந்துவிட வேண்டாம் என மக்களை கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார். மேலும் அவருக்கு பதக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
“கடின உழைப்பு குறித்து தெளிவாக புரிந்ததால் தான் எல்லோரும் கொண்டாடும் மிகப்பெரிய நட்சத்திரமாக உள்ளார் த.வெ.க. தலைவர் விஜய். அதே தெளிவோடும், உழைப்போடும் அவர் தொடர்ந்து பயணிக்க வேண்டும்” என்று விஜய்க்கு திமுக எம்.பி, கனிமொழி தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தின் ட்ரெய்லர் இன்று நன்பகல் 1 மணிக்கு வெளியாக உள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றது. 40 தங்கம் உள்ளிட்ட 126 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடமும், சீனா இரண்டாவது இடமும், ஜப்பான் மூன்றாவது இடமும் பெற்றுள்ளது. 6 பதக்கங்களுடன் இந்தியா 71-ஆவது இடம் பெற்றது.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர், வீராங்கனைகள் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அவர்களை நினைத்து நாடே பெருமை கொள்வதாகவும், அடுத்து வரும் விளையாட்டுப் போட்டிகளில் இன்னும் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துவதாகவும் X தளத்தில் தெரிவித்துள்ளார்.