News 5
News 5

News 5 – (12.10.2024) முதன்முறையாக சகாரா பாலைவனத்தில் வெள்ளம்!

1. முதன்முறையாக சகாரா பாலைவனத்தில் வெள்ளம்!

Flooding in the Sahara desert for the first time
Sahara desert

டந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக சகாரா பாலைவனத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஒரு வருடம் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டித் தீர்த்ததே இந்த பாலைவன வெள்ளத்திற்குக் காரணமெனக் கூறப்படுகிறது.

2. 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன்!

Summons to 13 railway employees
Summons to 13 railway employees

வரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளார் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர். கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மோட்டர் மேன், கவரப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி என 13 பேர் இன்று மாலை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவும் அவர்  உத்தரவிட்டுள்ளார்.

3. பொதுத்தேர்வு அட்டவணை!

Anbil Mahesh Poyyamozhi
Anbil Mahesh Poyyamozhi

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை நாளை மறுநாள் அக்டோபர் 14 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  வெளியிடுகிறார்.

இதையும் படியுங்கள்:
News 5 – (12.10.2024) வசூல் வேட்டையில் 'வேட்டையன்' திரைப்படம்!
News 5

4. 'கொம்புசீவி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

 'Kombuseevi' Movie
'Kombuseevi' Movie

ரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் நடிக்கும், ‘கொம்புசீவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

5. இந்தியா - வங்கதேசம் இடையிலான கடைசி டி20 போட்டி!

3rd and last T20 match between India and Bangladesh
India and Bangladesh

ந்தியா - வங்கதேசம் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கெனவே வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இன்று நடைபெறும் இந்தப் போட்டியிலும் வென்று 3 - 0 என்ற கணக்கில் முழுமையாக டி20 தொடரை கைப்பற்றுவதில் இந்திய அணி முனைப்புடன் செயல்படக் கூடும். அதேநேரத்தில் வங்க தேச அணி கடைசி போட்டியிலாவது ஆறுதல் வெற்றியைப் பெறுவதற்கு அதிக கவனத்துடன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com