உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை நிறுத்தி ரஷ்ய படைகள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று ஐ.நா கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது. ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 99 நாடுகளும், எதிராக 9 நாடுகளும் வாக்களித்துள்ளனர்.
ஆனால் இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள் வாக்களிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக 38,000 மக்கள் உயிரிழந்த இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காததும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதல்நிலை தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடப்பெறுகிறது. இந்த தேர்வை, 797 மையங்களில், 1,25,726 ஆண்கள், 1,12,501 பெண்கள், 20 மாற்று பாலினத்தவர் என மொத்தம் 2,38,247 பேர் எழுதுகின்றனர்.
நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். தற்போது இந்த திரைப்படத்தின் 2-ம் பாகத்தை தயாரிக்க உள்ளதாகவும், இதில் மீண்டும் நடிகை நயன்தாராவே அம்மன் வேடம் அணிந்து நடிக்க உள்ளதாகவும் வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 7 செ.மீ முதல் 11 செ.மீ வரை மழைக்கு வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
"ஆரம்ப காலத்தில் விராட் கோலிக்கு எதிராக விளையாடுவது மிகவும் எளிதாக இருந்தது. ஒவ்வொரு பந்திலும் அவரை வீழ்த்திவிடலாம் என்றே தோன்றும். ஆனால், இப்போது அப்படியெல்லாம் அவரை வீழ்த்திவிட முடியாது. அவருக்கு எதிராக விளையாடும்போது தாழ்வு மனப்பான்மைதான் ஏற்படுகிறது,” என இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.