2024ம் ஆண்டிற்கான தென் ஆப்ரிக்க அழகி பட்டத்தை தட்டிச் சென்று சாதனை படைத்த 28 வயதான மாற்றுத்திறனாளி மியா லீ ரூக்ஸ். ஒரு வயதில் கேட்கும் திறனை இழந்த மியா, "நான் காது கேளாத பெண் என்பதில் பெருமை கொள்கிறேன். எல்லைகளை தகர்த்து எறிவதற்காக நான் பூமிக்கு வந்துள்ளேன் என நம்புகிறேன். அது இன்று நிஜமாகிவிட்டது" என பெருமிதமாக கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர் - வீராங்கனைகளை சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி சந்திக்கிறார். சுதந்திரதின நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு வீரர்- வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து 470 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 16, 17 ஆகிய தேதிகளில் 365 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
“ஒரு படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் ஒரே சமயத்தில் சிறந்த நடிகர், நடிகைக்கான விருது பெறுவது அரிது. திருவும், சோபனாவும் ரொம்பவே ஸ்பெஷல். திருவை நன்றாக காண்பித்த சோபனாவுக்கு நன்றி” என ‘திருச்சிற்றம்பலம்' படத்திற்கு FilmFare விருதுகள் கிடைத்தது குறித்து நடிகர் தனுஷ் மகிழ்ச்சியாக தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் முதல் தர போட்டி தொடரான துலீப் டிராபி செப்டம்பர் 5 முதல் 22 வரை நடக்கவுள்ளது. மொத்தம் 4 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பை வழங்கப்படும். ஆனால் இந்த போட்டியில் சீனியர் வீரர்களான ரோகித், கோலி, அஷ்வின், பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.