தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பெற்றது. சிறந்த பின்னணி இசைக்கான விருதை பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் வென்றுள்ளார். சிறந்த ஒலி அமைப்பிற்கான விருதை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியும் ஒளிப்பதிவிற்கான விருதை ரவி வர்மாவும் பொன்னியின் செல்வன் படத்திற்காக பெற்றுள்ளனர்.
கடந்த தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார். வயநாடு மக்களவை தொகுதி தற்போது காலியாக இருப்பதால் வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், "வயநாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரால் அத்தொகுதியில் மக்களவை இடைத்தேர்தல் நடத்த முடியாது. சரியான தருணத்தில் அங்கு வாக்குப்பதிவு நடக்கும்" என தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள, 'தென் திசையின் தீர்ப்பு' என்ற நூல், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இன்று வெளியிடப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் திமுக கூட்டணி பெற்ற வெற்றி குறித்து புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் வரும் ஆக.23-ம் தேதி தெலுங்கில் வெளியாகும் என இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
“சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் (15,921) என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுக்கு (12,027) வாய்ப்பு உள்ளது. தற்போது ரூட்டுக்கு 33 வயது ஆகிறது. இன்னும் 4 ஆண்டுகள் விளையாடினால், நிச்சயம் 3,000 ரன்களுக்கு மேல் குவித்து சச்சினின் சாதனையை முறியடிப்பார்" என அஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.