காங்கோ, மத்திய ஆப்பிரிக்கா உள்ளிட்ட 116 நாடுகளில் இதுவரை M-Pox (குரங்கு அம்மை) கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் M-Pox வைரஸ் (குரங்கு அம்மை) தொற்று இல்லை. இந்த நோய் வேகமாக பரவக் கூடியது என்பதால், தமிழக மக்கள் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என பொதுச்சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV-D3 (எஸ்.எஸ்.எல்.வி - டி3) ராக்கெட். 175.5 கிலோ எடை கொண்ட EOS-08 மற்றும் SR டெமோசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் SSLV-D3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ புவி கண்காணிப்பு, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயன்பாடுகளுக்காக SSLV-D3 ராக்கெட்டை விண்ணில் ஏவியுள்ளது.
ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுமுறையை அறிவித்தார் அம்மாநில துணை முதல்வர் பிரவதி பரிதா. மாதவிடாய் சுற்றின் முதல் அல்லது 2-வது நாளில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் இந்த விடுமுறை எடுத்துக்கொள்வது பெண்களின் விருப்பத்தை பொறுத்தது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா- இலங்கை இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இன்று முதல் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்த கப்பல் நாகையில் இருந்து புறப்பட்டு 4 மணி நேரத்தில் காங்கேசன் துறைமுகத்தை சென்றடையும். சாதாரண கட்டணம் ₹5,000 ஆகவும், பிரீமியம் கட்டணம் ₹7,500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவையின் முதல் பயணம் காலை 9 மணிக்கு தொடங்கியது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் அமன் செராவத்திற்கு வடக்கு ரயில்வேயில் சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.