News – 5 (16.09.2024) CWC - அனிதா சம்பத் யாரை தாக்குகிறார்!

News 5
News 5

1. 3 மாதங்களில் இரண்டு முறை ட்ரம்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு!

donalad trump
donalad trump

டந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அதில் அவரது காதில் காயம் ஏற்பட்டது. அவரது ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், நேற்று மாலை ஃப்ளோரிடாவில் உள்ள கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் ட்ரம்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரைக் குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. இம்முறை அவர் காயம் ஏதுமின்றி ட்ரம்ப் தப்பித்து உள்ளார்.

ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய நபர், அவரது வாகன என்னை வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 58 வயதான ரயான் ரூத் வெஸ்லி என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆயினும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் குறித்து ஏதும் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தை அமெரிக்காவின் எஃப்பிஐ புலனாய்வு அமைப்பு ‘படுகொலை முயற்சி’ வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

2. 6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை!

Vande Bharat Express
Vande Bharat Express

டாடா நகர் - பாட்னா, பாகல்பூர் - தும்கா - ஹவுரா, பிரமாபூர் - டாடா நகர், கயா - ஹவுரா, தியோகர் - வாரணாசி மற்றும் ரூர்கேலா - ஹவுரா ஆகிய 6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

3. திமுக சார்பில், பவள விழா கொண்டாட்டம்!

DMK
DMK

திமுக சார்பில் ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாள், திமுக உருவான நாள், பெரியார் பிறந்த நாள் என மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திமுக உருவாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பவள விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நாளை 17,09,2024 அன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கமலா ஹாரிஸ் அணிந்த கம்மலால் சர்ச்சை… ஆடியோ கம்மலாக இருக்கும் என்று சந்தேகம்!
News 5

4. அனிதா சம்பத் தாக்குவது பிரியங்காவையா? மணிமேகலையையா?

Priyanka, Anitha sampath, Manimegalai
Priyanka, Anitha sampath, Manimegalai

குக் வித் கோமாளி ஷோவில், ‘‘போட்டியாளராக வந்திருக்கும் VJ பிரியங்கா தலையீடு அதிகமாக இருக்கிறது. புகார் அளித்தால் என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். சுயமரியாதை முக்கியம்" என கூறி அந்த ஷோவில் இருந்து விலகியதாக அறிவித்தார் Anchor மணிமேகலை. இந்நிலையில், இதை குறிப்பிட்டு "இதுதான் கர்மா. யார் அடுத்தவரை கீழே போட்டு மிதிக்க நினைக்கிறாரோ, அவர் அதேபோன்ற இன்னொருவரால் செருப்படி வாங்குவார்" என செய்தி தொகுப்பாளரும்,  நடிகையுமான அனிதா சம்பத் பதிவிட்டுள்ளார்.

அவர் பிரியங்காவை தாக்குகிறாரா அல்லது மணிமேகலையை சொல்கிறாரா என வெளிப்படையாகச் சொல்லவில்லை. அதனால் ரசிகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், மேலும் மணிமேகலை ஷோவில் இருந்து விலகுவதாக நேற்று போட்ட பதிவில், "Guts🔥 all the best mani" என அனிதா சம்பத் கமெண்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

5.  'டி-20' தொடரில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை பகிர்ந்தன!

 England and Australia
England and Australia

ங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்று மான்செஸ்டரில் மூன்றாவது, கடைசி 'டி-20' போட்டி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், கனமழை காரணமாக போட்டியை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தொடர் 1 - 1 என சமன் ஆனதால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com