News 5 (17-07-2024) - 'விடுதலை-2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

News 5
News 5

1. அமெரிக்காவிற்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா!

vinay mohan kwatra
vinay mohan kwatraCredits : jagran josh

அமெரிக்காவிற்கான இந்திய தூதராக இருந்த தரண்ஜித் சந்து, கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றுள்ளார். இதுவரை அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில், அமெரிக்காவிற்கான இந்திய தூதராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் வினய் மோகன் குவாத்ராவை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2. 'ஏர் இந்தியா' விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 25 ஆயிரம்  இளைஞர்களால் பரபரப்பு!

Air india airport
Air india airport

மும்பை ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் உள்ள 2,216 காலி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று நடைபெற்றுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க சுமார் 25 ஆயிரம் இளைஞர்கள் ஒன்றாக கூடி முண்டியடித்ததால் பலரும் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டுள்ளனர்.

3. காய்கறிகள் விலை அதிகரிப்பு!

Vegetables
Vegetables

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பெய்துவரும் மழையால் இறக்குமதி குறைந்து, காய்கறிகளின்  விலை அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, ஒரு கிலோ தக்காளி 70 லிருந்து 80 ரூபாயாக இருந்த நிலையில், இப்போது ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிலோ கேரட், பீன்ஸ் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

4. ‘விடுதலை-2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

Viduthalai 2
Viduthalai 2

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடிக்கும் ‘விடுதலை-2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இளையராஜா இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

5. இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு கூட்டம் ஒத்தி வைப்பு!

T20
T20

இந்திய கிரிக்கெட் அணி வரும் 22-ம் தேதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு கூட்டம் இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற இருந்த இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com