News 5 (17-07-2024) தக்காளி விலை மீண்டும் உயர்வு!

News 5
News 5

1. இஸ்ரேல்- காசா போர்  பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!

Israel-Gaza War
Israel-Gaza War

கடந்த 13-ஆம் தேதி இஸ்ரேல் ராணுவம் காசா மீது நடத்திய தாக்குதலில் 90 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது காசா மீது இரவில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதில் 60க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹமாஸ் அமைப்பினரின் கடற்படை கமாண்டரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்வதாகவும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் பருவ மழை தீவிரமடையும் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

sea
sea

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் பருவ மழை தீவிரமடையும் எனவும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் ஜூலை 19-இல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

3. தக்காளி விலை மீண்டும் உயர்வு!

Tomato
Tomato credits : passionate

தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று சென்னை கோயம்பேடு சந்தையில், தக்காளியின் விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில், இன்று ஒரு கிலோ தக்காளி 70லிருந்து 80 ரூபாயாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

4. ‘தங்கலான்’ படத்தின் பாடல் இன்று வெளியாகும் - படக்குழு அறிவிப்பு!

Thangalaan
Thangalaan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில், பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இந்த படத்தின் ‘மினிக்கி மினிக்கி’ என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு  வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

5. இந்திய 'டி-20' அணியின் கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட உள்ளார்!

suryakumar yadav
suryakumar yadav

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இந்திய அணி இலங்கை செல்லவுள்ளது. இந்த போட்டி வரும் ஜூலை 27, 28, 30ல் நடக்க உள்ளது. உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, 'டி-20'ல் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனால் துணைக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால், புதிய பயிற்சியாளர் காம்பிர், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் இணைந்து, சூர்யகுமாரை கேப்டனாக தேர்வு செய்ய உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com