News 5 (18-07-2024) ஒரு நாள் கலெக்டராக பணிபுரியும் அரசு பள்ளி மாணவி!

News 5
News 5

1. சீன மாலில் தீடீர் தீ விபத்து!

China mall fire
China mall firecredits: india.com

சீனாவின் மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் ஜிங்காங் நகரில் 14 மாடி கொண்ட மால் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மாலில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், நேற்று இரவு தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் 300 பேர் மீட்பு பணியில் ஈடுப்பட்டும் 16 பேர் பலியாகியுள்ளனர். 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

2. ஒரு நாள் கலெக்டராக பணிபுரியும் அரசு பள்ளி மாணவி!

Oneday collector
Oneday collector

"காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில், பள்ளி மாணவர்கள் ஒருநாள் மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு தரப்படும்" என்று மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவித்திருந்தார். இதன்படி காரைக்கால்மேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி லித்யாஸ்ரீ இன்று ஒரு நாள் கலெக்டராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

3. 80,000 பேருக்கு விரைவில் முதியோர் உதவித் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!

Old age grant
Old age grant

முதல்வர் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் பெறப்படும் மக்களின் மனுக்கள், 15 நாட்களில் தீர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், 85,000 பேருக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 80,000 பேருக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்காக 5337 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

4. தமிழகத்தில் 568 பேர் டெங்குவால் பாதிப்பு -  பொது சுகாதாரத்துறை தகவல்!

dengue
dengue

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வெப்பநிலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாகவே பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது டெங்கு காய்ச்சலும் பரவ தொடங்கியுள்ளது. கடந்த7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து கடந்த16 ஆம் தேதிவரை 5976 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் உயிரிழந்ததாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

5. திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி அபார வெற்றி!

Dindigul team beat Tirupur team and won!
Dindigul team beat Tirupur team and won!credits: etv

கோவையில்,  8 அணிகள் பங்கேற்றுள்ள 8வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அந்த வகையில், நேற்று இரவு நடந்த 16வது லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி பெற்றுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com