News 5 (18-07-2024) 10 சிம்கார்டுகள் வைத்திருந்தால் சிறை தண்டனை!

News 5
News 5

1. வங்கதேச நாடு முழுவதும் இணைய சேவை முடக்கம்!

Internet service shutdown across Bangladesh!
Internet service shutdown across Bangladesh!credits : mint

வங்கதேசம் - பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை வங்கதேசத்தில் இருந்து வந்தது. ஆனால் இதுக்கு எதிராக கடந்த 2018-ல் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் 30 சதவீத இட ஒதுக்கீடை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டது. இதை எதிர்த்து வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக மொபைல் இணைய சேவையை முடக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

2. 10 சிம்கார்டுகள் வைத்திருந்தால் சிறை தண்டனை!

Jail sentence if you have 10 SIM cards!
Jail sentence if you have 10 SIM cards!

'ஒருவரின் பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க வேண்டும். 10 அல்லது அதற்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை' என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

3. தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில்கள்!

Train
Train

வருகிற ஜூலை 20ம் தேதி முதல் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே, வாரம் இருமுறை புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.

  • தூத்துக்குடியில் இருந்து வியாழன் இரவு 10.50 மணிக்கு புறப்படும் ரயில், வெள்ளிக்கிழமை காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

  • மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரயில், தூத்துக்குடிக்கு காலை 4.20 மணிக்கு சென்றடையும்.

  • தூத்துக்குடியில் இருந்து சனிக்கிழமை இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்று கிழமை காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

  • மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரயில், தூத்துக்குடிக்கு திங்கட்கிழமை காலை 4.20 மணிக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

4. ஹிப்ஹாப் தமிழாவின் புதிய பட தலைப்பு இன்று வெளியீடு!

hiphop movie name
hiphop movie name

ஹிப்ஹாப் தமிழா ஆதி தயாரித்து, இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த படத்தின் பெயர் வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் 'கடைசி உலக போர்'.

5. ஒலிம்பிக்கில்  பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஈபிள் டவர் உலோகம் பதிக்கபட்ட பதக்கம்!

Eiffel Tower metal medal for Olympic medalists!
Eiffel Tower metal medal for Olympic medalists!

இந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்க உள்ள பாரிஸ் ஒலிம்பிக்கில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஈபிள் டவர் உலோகம்  பதிக்கபட்ட பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. தங்கம், வெள்ளி, வெண்கலம் என சுமார் 5,084 பதக்கங்களில் ஈபிள் டவர் உலோகம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 329 விளையாட்டு ஈவென்ட்கள் நடத்தப்பட உள்ளது. சுமார் 10,500 பேர் இதில் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com