உலகிலேயே மிகக் குறுகிய நேரத்தில் சிறிய ரக விமானம் ஒன்று ஸ்காட்லாந்தில் உள்ள வெஸ்ட்ரே மற்றும் பாப்பா வெஸ்ட்ரேயின் ஓர்க்னி தீவுகளுக்கு இடையே இயக்கப்படுகிறது. இரு தீவுகளுக்கும் இடையே 2.7 கிலோ மீட்டர் தொலைவு இடைவெளி உள்ள நிலையில், பயண நேரம் 53 வினாடிகளாகவும் புறப்பாடு மற்றும் தரையிறங்கும் நேரங்களுடன் சேர்த்து ஒன்றரை நிமிடம் மட்டுமே ஆவதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானத்தில் 10 பயணிகள் மட்டும் அமரும் வகையிலும் பைலட்டுகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையிலும் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நேரடி வரி வசூல் 182 சதவீதம் அதிகரித்து 19 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை எட்டி உள்ளது. 10 ஆண்டுகளில் தனி நபர் வருமான வரி வசூல் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வரும் 22ம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 20ம் தேதி உருவாக உள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவான பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடையும் எனவும் கூறப்படுகிறது.
கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜீவா, ‘விஜய்யின் த.வெ.க. கட்சி மாநாட்டிற்குப் போவதற்கான ஐடியா உள்ளதா?’ என்ற கேள்விக்கு, ‘வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போவேன்’ என தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம், அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய 2வது இந்திய வீரர் என்ற எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி. சச்சின் - 664, விராட் கோலி 536, எம்.எஸ்.தோனி - 535.