மேற்கு வங்கம் கொல்கத்தாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து சி.பி.ஐ, விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மருத்துவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 'மருத்துவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை. மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்' என பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அண்மையில் எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் நிறுவன மசாலாக்களை ஹாங்காங் அரசு தடை செய்தததை அடுத்து, இந்தியாவில் நடத்தப்பட்ட சோதனையில், இந்தியாவிலுள்ள நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மசாலா பொருட்களில் 12 விழுக்காடு தரமற்றவை என மத்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் தகவல் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சரின் தனி செயலாளராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம், தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஞானவேல் இயக்கியத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கிறார். அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள 'கங்குவா' திரைப்படமும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாவதால், இரண்டு படங்களும் போட்டி போடும் என அறியப்படுகிறது.
மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் 2வது சீசன் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2 வரை நடக்கவுள்ளது. இதில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-3' இடம் பிடிக்கும் அணிகள், 2 பிரிவுகளாக 'சூப்பர்-6' சுற்றில் விளையாடும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் அரையிறுதியில் ஜனவரி 31 மோதும். ஃபைனல் பிப்ரவரி 2ல் நடைபெறும். இதற்கான அட்டவணை இன்று வெளியானது.