கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று விசாரணை நடத்தவுள்ளது.
அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், காவலாளிகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா தகவல் அளித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில், மாற்றுத்திறனாளிக்கான நடைபாதை அமைத்ததை அடுத்து, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிக்கான நடைபாதை அமைக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.
நேற்று வாழை திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், யதார்த்த வாழ்வை சித்தரிக்கும் திரைப்படங்களான ‘கொட்டுக்காளி’ மற்றும் ‘வாழை’ திரைப்படங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின் தமது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படமும், வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான ‘கொட்டுக்காளி’ படமும் வரும் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிவித்தார்.
பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை பிரான்ஸ் தலைநகரில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கும் 84 வீரர் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி காணொலியில் இன்று கலந்துரையாடினார்.