News 5 –(20/07/2024) மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையில் மத்திய அரசு விளக்கம்!

News 5
News 5

1. "ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவேன்" -  டொனால்ட் டிரம்ப்!

"I will end the war with Russia" - Donald Trump!
"I will end the war with Russia" - Donald Trump!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் இருவரும் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர். அப்போது "ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவேன்" என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் அடுத்த அமெரிக்க அதிபராக, உலகத்திற்கு நான் அமைதியை கொண்டு வருவேன் என்றும் கூறியுள்ளார்.

2. மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையில் மத்திய அரசு விளக்கம்!

Central government explanation on Microsoft technology problem!
Central government explanation on Microsoft technology problem!

“விமான சேவை வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது விமானப் போக்குவரத்து சீராக நடந்து வருகிறது” என்று மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் "நேற்று ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக பின்னடைவுகள் உள்ளன. அவை படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்துள்ளது.

3.  நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

NEET Results Released!
NEET Results Released!credits: Mint

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட், கடந்த மே 5ம் தேதி நடந்தது. இந்த தேர்வு முடிவுகளை உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேர்வு மையங்கள் வாரியாக தேசிய தேர்வு முகமை இன்று (ஜூலை 20) வெளியிட்டது. exams.nta.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், இந்த தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

4. போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உதவிட ஸ்டாலின் உத்தரவு!

Tustal's order to help the Tamils ​​stuck in the struggle!
Tustal's order to help the Tamils ​​stuck in the struggle!

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டு எதிரான போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உதவிட அயலகத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் தமிழக அரசை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளார்.

5. கன்னடத்தில் விஸ்வாசம்!

Visvasam in Kannada!
Visvasam in Kannada!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'விஸ்வாசம்'. தற்போது அந்த படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com