அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக பரவலாகப் பேசப்பட்டுவந்த நிலையில், இந்திய தூதரகம் அதுகுறித்து கூறுகையில், "இந்திய தூதரகத்தின் அதிகாரி ஒருவர் செப்டம்பர் 18ம் தேதி அன்று மாலை காலமானார் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். தூதரக அதிகாரியின் மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்தவர் தொடர்பான கூடுதல் விவரங்கள் குடும்பத்தின் தனியுரிமைக்காக வெளியிடப்படவில்லை" என தெரிவித்துள்ளது.
சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் சூரியனைச் சுற்றி வருகின்றன. கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றையொன்று, சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது நிகழும். அந்த வகையில், சூரியக் குடும்பத்தின் மிகத் தொலையில், உள்ள நெப்டியூன் கோளை இன்று (செப்டம்பர் 21) இரவு இந்தியர்கள் பார்க்க முடியுமாம். அதாவது, சூரியனுக்கும், நெப்டியூனுக்கும் நடுவில் இன்று பூமி வருகிறது என கூறப்படுகிறது. சூரியன் மேற்கில் மறைவது போல, இந்தக் கோள் கிழக்கில் உதயமாகுமாம். டெலஸ்கோப் மூலம் பார்த்தால் வானில் நீல நிறத்தில் ஒரு சிறு புள்ளி போல நெப்டியூன் பிரகாசிக்கும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அரசுப் பணிகளுக்காக பட்டதாரிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வையொட்டி இன்றும், நாளையும் ஜார்க்கண்ட் முழுவதும் மொபைல் இணைய சேவை நிறுத்தம் செய்யப்படவுள்ளது. தேர்வு முறைகேட்டை தடுக்கும் விதமாக, காலை 8 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இணைய சேவை நிறுத்தப்படுவதாக அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
இன்று நடைபெற்ற ‘வேட்டையன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, "சினிமாவில் நடிக்க வந்து 50 வருடங்கள் ஆகப்போகிறது. ஒன்றும் தெரியாமல் ரயில் ஏறி சென்னை வந்து, நீங்கள் கொடுத்த ஆதரவில்தான் இங்கு இருக்கிறேன்" என தனது வாழ்க்கைப் பயணம் குறித்து பேசிய ரஜினிகாந்த், "சகுனிகள் வாழும் சமுதாயத்தில் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும். கெட்டவர்களிடம் இருந்துதான் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது" எனக் கூறினார்.
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கௌரவிக்கும் விதமாக, நம்பர் 7 பொறிக்கப்பட்ட யூரோ மதிப்புள்ள நாணயத்தை போர்ச்சுகல் அரசு வெளியிட்டுள்ளது. அந்த நாணயத்தில், ரொனால்டோவின் உருவமும், அவரது ஜெர்சி எண்ணான 7ஐ குறிக்கும் வகையில், CR7 என பொறிக்கப்பட்டுள்ளது.