ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள ஓட்டலில் உணவு பரிமாற 'ரோபோ'க்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் பின்பற்றப்படும் ரோபோ சேவையை தானும் அறிமுகம் செய்துள்ளதாக ஓட்டல் உரிமையாளர் கூறியுள்ளார்.
மூன்று நாள் பயணமாக போலந்த் சென்ற பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து, 'ரயில் போர்ஸ் ஒன்' மூலமாக இன்று 10 மணி நேரம் பயணித்து உக்ரைன் செல்கிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக பேசப்படுகிறது.
மஞ்சள், கருஞ்சிவப்பு நிறம் மற்றும் இரண்டு போர் யானைகளுக்கு மத்தியில் வாகைப்பூவுடன் த.வெ.க தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றினார் விஜய். அதன் பின் "இதுவரை நமக்காக உழைத்தோம், இனி வரும் காலங்களில், தமிழ்நாட்டிற்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம். புயலுக்குப் பின் அமைதி என்பது போல், கட்சி கொடிக்கான வரலாற்று பின்னணி உள்ளது: அதையும் விரைவில் அறிவிப்போம்" என பேசிய த.வெ.க தலைவர், "பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன்" என நெஞ்சில் கை வைத்தபடி த.வெ.க கட்சியின் உறுதிமொழியை வாசித்தார். அதை தொடர்ந்து "தமிழன் கொடி பறக்குது; தலைவன் யுகம் பொறக்குது" என்ற த.வெ.க கட்சி பாடலையும் வெளியிட்டார்.
"நான் சின்ன வயசுல என்னலாம் பார்த்தேனோ, எனக்கு என்ன நடந்ததோ அதை தான் படமா பண்ணியிருக்கேன். 'வாழை' படத்துல என்னோட அறிவை திணிக்கல, என்னோட வலியை தான் திணித்துள்ளேன்" என 'வாழை' படத்தை பற்றி இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியுள்ளார்.
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு. ஒலிம்பிக் நிறைவு பெற்றபின், ஓய்வு முடிவை அறிவித்த ஸ்ரீஜேஷ், இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் அறிவித்துள்ளார்.