மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உச்ச நீதி மன்றம் “எங்களுக்கும் மருத்துவர்கள் மீது நலனும் அக்கறையும் உள்ளது. எனவே இச்சூழலை அரசியலாக்க வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்யும். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். அமைதியான முறையில் போராடிய மருத்துவர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அனைத்து மருத்துவமனை நிர்வாகத்துக்கும் உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவின்படி பணிக்குத் திரும்பும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து மாநில அரசு தலைமைச் செயலாளர்கள், காவல்துறை டிஜிபிக்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில், உடலில் விழி வெண் படலங்கள் உட்பட 99.98% பகுதியில் அதிகளவு பச்சை குத்தி ஓய்வு பெற்ற ராணுவ வீராங்கனை ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக கொடியில் யானைப் படம் இடம் பெற்றுள்ளதற்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அவர்களின் கட்சி கொடியில் ஏற்கனவே யானை இருப்பதால், தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆனந்தன் "தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும். தேர்தல் ஆணைய விதிப்படி சிக்கிம், அசாம் தவிர எந்த மாநில கட்சிகளும் யானையை கொடியிலோ, சின்னமாகவோ பயன்படுத்த முடியாது" என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று 'வாழை' திரைப்படத்தை பார்த்த விட்டு, இயக்குநர் பாலா மற்றும் நடிகர் சூரி மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தமிட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இன்று உலக கோப்பையுடன் மும்பை சித்தி விநாயகர் கோவிலில் இந்திய அணி வீரர்கள் ஜெய் ஷா, ரோஹித் சர்மா சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். இருவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பலத்த வரவேற்பு நடந்துள்ளது.