News 5- (23-07-2024) புதன் (MERCURY) கிரகத்தின் நிலப்பரப்பிற்கு அடியில் வைர படிவங்கள்!

News 5
News 5

1. புதன் (MERCURY) கிரகத்தின் நிலப்பரப்பிற்கு அடியில், வைர படிவங்கள்!

Diamonds form beneath the surface of Mercury!
Diamonds form beneath the surface of Mercury!

சூரியனுக்கு அருகில் உள்ள புதன் (MERCURY) கிரகத்தின் நிலப்பரப்பிற்கு அடியில், 50 கி.மீ. ஆழத்தில், 15 கி.மீ தடிமனில் வைர படிவங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக சீனாவைச் சேர்ந்த யான்ஹாவோ லின் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் கிடைத்துள்ளது! அதீத வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தின் காரணமாக மேல் தட்டுக்கு கீழே புதைந்திருக்கும் கார்பன் படிவங்கள் வைரக் கட்டிகளாக மாறியிருக்கலாம் எனவும் அதை மனிதர்களால் பயன்படுத்த முடியாது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2. அங்கன்வாடிகளில் நர்சரி, எல்.கே.ஜி - யு.கே.ஜி துவக்கம்!

State Women and Child Welfare Minister Lakshmi Heppalkar
State Women and Child Welfare Minister Lakshmi Heppalkar

அங்கன்வாடிகளில் நர்சரி, எல்.கே.ஜி - யு.கே.ஜி வகுப்புகள் துவக்கி வைத்த மாநில பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் "அனைத்து வகுப்பு குழந்தைகளுக்கும் தரமான கல்வி, சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நாட்டிலேயே முதன் முறையாக, அங்கன்வாடிகளில் நர்சரி, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட்டு உள்ளன'' என தெரிவித்துள்ளார். மேலும் பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதி ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

3. பட்ஜெட் தாக்கல் செய்தார்  நிதியமைச்சர் நிர்மலா!

Finance Minister Nirmala presented the budget!
Finance Minister Nirmala presented the budget!

நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தற்போது வரை இந்த பட்ஜெட்டில்,

  • நாட்டில் உள்ள வேளாண்துறையில் மானியம், கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்காக ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • புதிய சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு

  • விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி

  • முன்னணியில் உள்ள 500 நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு ரூ.6,000 உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப்

  • நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு மேலும் ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு.

4. புறநகர் ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Train Mileage
Train Mileage
  • சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஆகஸ்ட் 2 வரை பகல் நேர புறநகர் ரயில் சேவை வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும்.

  • இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை மட்டும் புறநகர் ரயில் சேவைகள் இயங்காது.

  • ஜூலை 27 மற்றும் 28 அன்று புறநகர் ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் ரத்து

  • ஆகஸ்ட் 3 - 14 வரை புறநகர் ரயில் சேவைகள் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் முன்பு அறிவித்தது போலவே ரத்து செய்யப்பட்டுள்ளது  என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

5. டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க இலங்கை சென்றடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!

Indian cricket team reached Sri Lanka to participate in T20 and ODI series!
Indian cricket team reached Sri Lanka to participate in T20 and ODI series!

டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றடைந்தது. அங்கு அவர்கள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஐத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ODI தொடரிலும் விளையாட  உள்ளனர்.

மூன்று டி20 போட்டிகள் ஜூலை 27, ஜூலை 28 மற்றும் ஜூலை 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com