News 5 – (23-07-2024) தீடீரென தங்கம் விலை குறைய காரணம் என்ன?

News 5
News 5

1. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு குவியும் ஆதரவு!

US Vice President Kamala Harris!
US Vice President Kamala Harris!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அந்நாட்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட தேவையான கட்சி பிரதிநிதிகளின் ஆதரவை வென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் நடந்த முதல் வாக்கெடுப்பில், அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தேவையான 1,976 பிரதிநிதிகளின் ஆதரவை அவர் பெற்றுள்ளார்.

இது குறித்து கமலா ஹாரிஸ் "எங்கள் கட்சியின் வேட்பாளராக ஆவதற்கு தேவையான ஆதரவை பெற்றது குறித்து பெருமை அடைகிறேன். அடுத்த சில மாதங்கள் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து, அமெரிக்கர்களின் தற்போதைய பிரச்சினைகள் பற்றி பேசுவேன். கட்சியையும், நாட்டையும் ஒன்றிணைத்து அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பை தோற்கடிக்க நான் தீர்மானித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

2. தீடீரென தங்கம் விலை குறைய காரணம் என்ன?

Gold price
Gold Price

பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விற்பனை விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் 1 கிராம் இன்று காலை ரூ.6810வுக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.260 குறைந்து ரூ.6,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில், தங்கத்தின் மீதான சுங்க வரி 15% லிருந்து, 6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 குறைந்து, ரூ.52,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

3. "ஏழைகளுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

7 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 85 நிமிடங்கள் பட்ஜெட் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். மேலும், பட்ஜெட்டில் வருமான வரி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன எனவும், ஏழைகளுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

4. கடைகளின் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்!

M K. stalin
M K. stalin

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த வணிகர் நல வாரியம் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், "கடைகளின் பெயர் பலகையை தமிழில் மாற்ற வேண்டும். வீதிகளில் தமிழைக் காண முடியவில்லை என யாரும் சொல்லக்கூடாது" என்று வலியுறுத்தி இருக்கிறார். 

5. விஜய் தியேட்டர் எங்கு கட்டுகிறார்? 

TVK party Head Thalapathy Vijay
Thalapathy Vijay

சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு செல்லும் விஜய், பிரமாண்டமாக தியேட்டர் ஒன்று கட்டப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது. தற்போது புதுச்சேரியில் நடிகர் விஜய் தியேட்டர் கட்டப்போகிறார் எனவும், புஸ்ஸி ஆனந்தின் வழிகாட்டுதலின்படி, விஜய் தியேட்டர் கட்ட உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com