அரசு முறை பயணமாக உக்ரைன் சென்ற பிரதமரிடம், "இந்தியா தங்கள் பக்கம் இருக்க வேண்டும்" என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு "இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் இருக்கும்" என பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டிற்கான ஆன்லைன் விற்பனை இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. இந்த டிக்கெட்டுகள் நாளொன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவக் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்களில் இந்திய பாரம்பரிய ஆடைகளை அணியுமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் காலனி ஆதிக்கத்தில் அறிமுகமான கருப்பு அங்கி, தொப்பியை தவிர்க்குமாறு, மருத்துவ கல்லூரிகளுக்கு சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
"தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் குழந்தையை பராமரிக்க ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு கணவர் மற்றும் பெற்றோர் வசிக்கக்கூடிய மாவட்டங்களில் பணிபுரியலாம்" என்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பதக்கம் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்ந்த, இந்திய அணி வீரர் ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் 13 ஆண்டுகால அவரது கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.