அரசு முறை பயணமாக உக்ரைன் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய போது அவரை இந்தியா வரும்படி மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி, "மீண்டும் நாங்கள் இருவரும் ஒன்றாக சந்திப்பது நல்லது என நினைக்கிறேன். அதுவும் இந்தியாவில் நடந்தால் சிறந்தது. இந்தியா பெரிய, சிறந்த நாடு. போர் காரணமாக, அங்கு செல்வதற்கு நேரம் கிடைக்காதது பரிதாபம். இந்தியா எங்கள் பக்கம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்திய அரசும், பிரதமரும் என்னை பார்க்க தயாராக இருக்கும் பட்சத்தில் நான் இந்தியா வருவதில் மகிழ்ச்சி அடைவேன். எனது இந்திய பயணம் உக்ரைனில் உள்ள சூழ்நிலையை பொறுத்து அமையும்" என்று கூறியுள்ளார்.
வடக்கு ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு. கடந்த 9 மாதங்களில் 6-வது முறையாக வெடித்துள்ளது. இந்த முறை 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எரிமலைக்குழம்பு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.
புத்திதாக YouTube Channel தொடங்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo). 24 மணி நேரத்தில் 19.7 மில்லியன் Subscribers பெற்றதற்காக, GOAT எனக் குறிப்பிட்டு YouTube அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள்ளது. தற்போது 38 மில்லியன் Subscribers ஆக உயர்ந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது. இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கான எழுத்து தேர்வு கட்டணம் 150 ரூபாயிலிருந்து 225 ரூபாயாகவும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான கட்டணம் 600 ரூபாயிலிருந்து 900 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு 2024 - 25 ஆம் கல்வி ஆண்டுக்கான நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் பருவ தேர்விலிருந்து நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கோயம்புத்தூரில், ஹிப் ஹாப் ஆதி நடத்தும் 'Return Of The Dragon' இசைக்கச்சேரி வருகிற செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறுவதாக அறிவித்துள்ளார்.