அமெரிக்காவின் அரிசோனா, கலிபோர்னியா மாகாணங்களில் ஹண்டா வைரஸ் பாதித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். எலியின் எச்சில் மற்றும் கழிவுகளால் இந்த நோய் பரவுவதாக கூறப்படுகிறது.
ஹண்டா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு காய்ச்சல், ஜலதோஷம், உடல் வலி, வாந்தி ஆகியவை ஏற்படும் என்றும் சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரலில் நீர் கோர்த்து சுவாசப்பிரச்சனை ஏற்பட்டு மரணம் கூட நேரிடலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த வைரஸ்க்கு குறிப்பிட்ட சிகிச்சையோ, தடுப்பு மருந்தோ இல்லாத நிலையில், எலிகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் பாதிப்புகளை தவிர்க்கலாம் என்று அமெரிக்க மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் மொபைல் போன்களுக்கான சுங்க வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, இந்தியாவில் ஐ-போன்களின் விலையை 6 ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.
“ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காக உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை, இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த மக்களை பழிவாங்க உருவாக்கி இருக்கிறார்கள். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கே முரணானது” - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான 'ராயன்' நேற்று (ஜுலை 26) பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இந்த படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளதால் மிகவும் ஸ்பெஷலாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. படம் பார்த்த அனைவரும் தனுஷையும் படத்தையும் பாராட்டி வருகின்றனர். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் ராயன் படத்தில் தனுஷ் பக்காவாக தெரிகிறார் என்பது ரசிகர்களின் பாராட்டாக உள்ளது.
ராயன் திரைப்படம் முன்பதிவிலேயே அதிக வசூலை ஈட்டிய நிலையில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது. தனுஷ் திரைப்பயணத்தில் முதல்நாள் அதிக வசூலை ஈட்டிய படமாக ராயன் அமைந்துள்ளது. முதல் நாள் முடிவில் ராயன் படம் உலகம் முழுவதும் ரூ. 17.5 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை 'டி-20' கிரிக்கெட் தொடரின் 9வது சீசன் நக்கிறது. நேற்று தம்புலாவில் நடந்த முதல் அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டு, 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஃபைனலுக்கு முன்னேறியது.