News 5 – (26-07-2024) ஃபைனலுக்கு முன்னேறுமா இந்தியா?

News 5
News 5

1. கமலா ஹாரிஸ்க்கு ஒபாமா ஆதரவு!

Obama supports Kamala Harris!
Obama supports Kamala Harris!Credits : sky

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களமிறங்க உள்ள நிலையில், முன்னாள் அதிபர் ஒபாமா, கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம் எனக்கூறி, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

2. பாரீஸில் கிளர்ச்சியாளர்கள், ரயில்கள் மீது தாக்குதல்!

Rebels attack trains in Paris!
Rebels attack trains in Paris!Credits : reuters

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று (ஜூலை 26) ஒலிம்பிக் போட்டிகள் துவங்குக்கின்ற நிலையில், அங்கு கிளர்ச்சியாளர்கள் ரயில் பாதைகளை சேதப்படுத்தியும், ரயில்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் பாரீஸ் நகருக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

3. ஐபோன்களை தொடர்ந்து ஐபேட்களும் தயாரிப்பு - ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு!

Production of iPads followed by iPhones - Boxcon company decision!
Production of iPads followed by iPhones - Boxcon company decision!credits: financial times

ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்க்கான ஆலை, தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கி வருகிறது. இங்கு ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஐபோன்களை தொடர்ந்து ஐ-பேட்களையும் இந்த ஆலையில் தயாரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம்  2 ஆண்டுகளில் இந்த ஆலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

4. 4-வது நாளாக குறைந்துள்ள தங்கம் விலை!

Gold Price
Gold Price

தங்கத்தின் இறக்குமதி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, தங்கத்தின் விலை தொடர்ந்து 4வது நாளாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று (ஜூலை 26) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.6,415 விற்பனை ஆகிறது. சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320க்கு விற்பனை ஆகிறது.

5. ஃபைனலுக்கு முன்னேறுமா இந்தியா?

T20
T20

ஆசிய கோப்பை அரையிறுதியில் இன்று இந்தியா, வங்கதேசம் மோதுகின்றன. இலங்கையின் தம்புலாவில் பெண்களுக்கான 'டி-20' ஆசிய கோப்பை 9வது சீசன் நடந்து வருகிறது. இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில்,  ஃபைனலுக்கு முன்னேறுமா இந்தியா என அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com