உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையே இரண்டு வருடங்களாக போர் நீடித்து வருகிறது. முதலில் உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து அங்குள்ள சில மாநிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளது. தற்போது உக்ரைன் ராணுவம் ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்து கொண்டே வருகிறது. சமீபத்தில், ரஷ்யாவின் குர்ஸ்க் மாநிலத்தில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அந்த நிலையில், இன்று ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள 38 மாடிகள் கொண்ட கட்டடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், அந்த கட்டிடத்தில் இருந்த நான்கு பேர் காயமடைதுள்ளனர்.
கிழக்கு சம்ப்ரான் மாவட்டத்தில் உள்ள மோதிஹரி தனியார் மருத்துவமனையில் யாஷ்(22) என்ற இளைஞர் வயிற்றில் இருந்து கொத்துச்சாவி, கத்தி, நகம் வெட்டி, சாவி வளையம் உள்ளிட்ட பல உலோக பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது அந்த இளைஞர் பசிக்கும் நேரத்தில் உலோக பொருட்களை சாப்பிடுவார். அவருக்கு Game அடிக்சன் இருப்பதால், மனநலம் பாதிக்க்கப்பட்டு இது போன்று நடந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்கிறார். அங்கு 17 நாட்கள் தங்கும் அவர் செப்டம்பர் 12- ஆம் தேதி தமிழகம் திரும்புவார்.
"'வாழை' இந்தியாவின் 'Cinema Paradiso' தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு துயரமான சம்பவத்தை திரையில் லட்சக்கணக்கான மக்களுக்கு காட்ட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கு அதிக தைரியம் வேண்டும். மாரி செல்வராஜிற்கு என்னுடைய பாராட்டுக்கள்" என வாழை படத்திற்க்காக இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டி வாழ்த்து தெரிவித்த இயக்குநர் சுதா கொங்கரா.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகனும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான ரோஹன் ஜெட்லி, பிசிசிஐ-ன் அடுத்த செயலாளராக தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ செயலாளராக உள்ள ஜெய்ஷா, அடுத்த ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.