அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் அவர் அதிகாரபூர்வமாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் என உறுதியாகியுள்ளது.
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண இதுவரை 97 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை ஆகியுள்ளது. 1 கோடி டிக்கெட்டுகள் தயாரிக்கப்பட்ட நிலையில், விற்பனை அளவு மேலும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 1996-ல் நடந்த அட்லாண்டா ஒலிம்பிக்கில் 83 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தன.
லடாக்கில் உள்ள இந்திய வானியல் ஆய்வகத்தில் உள்ள 'GROWTH - India' எனப்படும் ரோபோ தொலைநோக்கி, பூமிக்கு மிக அருகில் வந்த, கட்டிட அளவிலான சிறுகோள் ஒன்றை புகைப்படம் எடுத்துள்ளது. வேகமாக செல்லும் சிறுகோளை மிகத் துள்ளியமாக கணித்து புகைப்படம் எடுத்து அசத்தியிருப்பதால், அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, 51 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பால் கடந்த 3 தினங்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை திடீரென அதிகரித்துள்ளது.
கூகுள் மேப்ஸ்க்குப் போட்டியாக வெப் பிரவுசரிலும் பயன்படுத்தும் வகையில் ஆப்பிள் மேப்ஸை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் மேப்ஸை நேரடியாக வெப் பிரவுசரில் பயன்படுத்தும் வகையில் பொதுப் பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளது. தற்போது அதில் Beta வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே கூகுள் மேப்ஸ் செயலிக்கு ஆப்பிள் மேப்ஸ் மிகப் பெரிய போட்டியாக இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.