News 5 – (28-08-2024) Airtel வாடிக்கையாளர்களுக்கு இனிய செய்தி!

News 5
News 5

1. 'ஆப்பிள்' நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரி கெவன் பரேக்!

 Kevan Parekh
Kevan Parekh

கலிபோர்னியா: கடந்த 2013-ம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனத்தில், நிதி திட்டமிடல் மற்றும் ஆய்வுக்குழுவின் துணை தலைவராக பணிக்குச் சேர்ந்த கெவன் பரேக் (52) இந்திய வம்சாவளியை சார்ந்தவர். இவர் தற்போது 'ஆப்பிள்' நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 2025, ஜனவரி 1-ல் இருந்து இந்த பொறுப்பை ஏற்க உள்ளார்.

2. ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது பெரும் ஆசிரியர்கள்!

Gopinath, Muralitharan(teachers)
Gopinath, Muralitharan (teachers)

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இந்த ஆண்டு தமிழகத்தின் வேலுார் மாவட்டம், ராஜகுப்பம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் மற்றும் மதுரை டி.வி.எஸ், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன்  தேர்வாகியுள்ளனர். இவர்களை வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி, டில்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார். 50,000 ரூபாய் ரொக்கப்பரிசு, வெள்ளி பதக்கம் மற்றும் தகுதிச்சான்றிதழும் வழங்க உள்ளார்.

3. Airtel வாடிக்கையாளர்களுக்கு இனிய செய்தி!

Apple tv, music in airtel
Apple tv, music in airtelCredits: communication today

ஏர்டெல் Subscribers, ஆப்பிள் Tv மற்றும் ஆப்பிள் Music சேவையை பெறும் வகையில் ஆப்பிள் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் ஒப்பபந்தம் செய்துள்ளது. இதன்மூலம் ஏர்டெல் Xstream Subscribers ஆப்பிள் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள், நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.  ஏர்டெல்  Subscribers-ன் பொழுதுபோக்கு அம்சத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

4. 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் Golden Sparrow பாடல்!

Golden Sparrow song
Golden Sparrow song Credits: Movie crow

தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் Golden Sparrow பாடல் வரும் 30-ம் தேதி வெளியாவதாக போஸ்டரை பகிர்ந்துள்ளது படக்குழு. இந்த பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

5. பாராலிம்பிக் போட்டிகள் பாரிஸில் இன்று தொடக்கம்!

Paralympic Games start today in Paris!
Paralympic Games start today in Paris!

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் போட்டிகள் பாரிஸில் இன்று இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிகள் வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில், 169 நாடுகளை சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் 22 போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com