News 5 - (29-07-024) இந்தியில் மகாராஜா!

News 5
News 5

1. கமலா ஹாரிசுக்கு குவியும் ஆதரவு!

US Vice President Kamala Harris!
US Vice President Kamala Harris!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்குக் தேர்தல் பிரச்சார நிதி குவிந்துள்ளது. ஒரு வாரத்தில் சுமார் ஆயிரத்து 674 கோடி ரூபாய் வசூலான நிலையில், புதிதாக ஒரு லட்சத்து 70 ஆதரவாளர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2. ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் இறுதிச்சுற்றில் பதக்கம் வெல்லுமா இந்தியா?

Arjun and Ramita
Arjun and Ramita

ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் மற்றும் ரமிதா தகுதி பெற்றுள்ளனர். இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் வென்று பதக்கங்களை கைப்பற்றுவார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

3. BSNL லை நோக்கி செல்லும் வாடிக்கையாளர்கள்!

Customers going to BSNL!
Customers going to BSNL!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் கட்டண உயர்வின் எதிரொலியாக BSNL-லை நோக்கி செல்லும் வாடிக்கையாளர்கள். கட்டண உயர்வுக்கு பின்பு, BSNL சேவைக்கு மாறியவர்களின் எண்ணிக்கை 30 லட்சமாக உள்ளது.

4. இந்தியில் மகாராஜா!

Maharaja in Hindi!
Maharaja in Hindi!

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'மகாராஜா' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

5. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி!

India won the match against Sri Lanka!
India won the match against Sri Lanka!

இலங்கை அணிக்கு எதிரான 2 வது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 8 ஓவரில் 78 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டத்தில், இந்திய அணி 6.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com