News 5 – (29-07-2024) குழந்தைகளுக்கான தடுப்பூசி...இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவசம்!

News 5
News 5

1. பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு நடிகைகள் பாராட்டு!

Actresses praise Manu Bhakar who won the medal!
Actresses praise Manu Bhakar who won the medal!

12 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு நடிகைகள் கரீனா கபூர், ஆலியா பட், அனுஷ்கா சர்மா ஆகியோர் இந்தியர்களுக்கு பெருமை சேர்த்ததாக வாழ்த்துக் கூறி, அவரை பாராட்டியுள்ளனர்.

2. சிறந்த திருநங்கை விருதை வழங்கிய மு.க.ஸ்டாலின்!

M.K.Stalin gave the Best Transgender Award!
M.K.Stalin gave the Best Transgender Award!

2023-2024ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது கன்னியாகுமரியை சேர்ந்த சந்தியா தேவி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைகளின் நலனுக்காக சிறப்பான முறையில், செயல்பட்டதாக சந்தியா தேவிக்கு  ₹1 லட்சம் ரூபாய்  காசோலை மற்றும் சான்றிதழை வழங்கி கௌரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

3. குழந்தைகளுக்கான தடுப்பூசி இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவசம்!

Vaccination for children is now free in private hospitals!
Vaccination for children is now free in private hospitals!

குழந்தை பிறந்தது முதல் 18 வயது வரை செலுத்தப்படும் 16 தடுப்பூசிகளை, குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளும் திட்டம் தமிழ்நாடு அரசு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் விலை வைத்து குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

4. 'ராயன்' படத்தை பாராட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ்!

Actor Raghava Lawrence praised the film 'Rayan'!
Actor Raghava Lawrence praised the film 'Rayan'!

‘ராயன்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ், “நேற்று 'ராயன்' திரைப்படம் பார்த்தேன். தனுஷ் மிகச்சிறப்பாக இயக்கியும் நடித்தும் இருக்கிறார். சகோதரர் எஸ்.ஜே.சூர்யா தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். துஷாரா விஜயன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். தமிழ் திரையுலகிற்கு ஒரு சர்வதேச தரத்திலான இயக்குநர் கிடைத்துள்ளார். தனுஷின் 50வது படத்திற்கு வாழ்த்துகள்" என பாராட்டியுள்ளார்.

5. விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் சூர்யகுமார்!

suryakumar yadav
suryakumar yadav

சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற (16 முறை) விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் சூர்யகுமார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை சூர்யகுமார் வென்றுள்ளார். விராட் கோலி இச்சாதனையை அடைய 125 போட்டிகள் எடுத்துக்கொண்ட நிலையில், 69 போட்டிகளிலே சூர்யகுமார் இச்சாதனையை படைத்துள்ளது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com