அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "ஒரு உற்சாகமான மாலைப் பொழுதில், முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஆற்றல்மிக்க விவாதங்களை நடத்தினோம்; எல்லையில்லா ஆற்றல் மற்றும் பரந்த வாய்ப்புகளின் நிலமான தமிழ்நாட்டிற்கு, உலகளாவிய முதலீட்டாளர்களை அழைத்தோம்; நிலையான உறுதியுடன் நம் கனவுகளைத் துரத்துவோம்!" என தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை தீவுத்திடலைச் சுற்றி நாளை நடைபெற உள்ள ஃபார்முலா-4 கார் பந்தயத்தை பார்க்க வருபவர்கள், சென்னைப் பல்கலை வளாகம், கலைவாணர் அரங்கம், ராஜரத்தினம் மைதானம் உள்ளிட்ட ஏழு இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவீரமாக நடந்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் தனி விமானம் மூலம் சீரடி சாய்பாபா கோயிலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அடுத்தமாதம் தி கோட் திரைப்படம் மற்றும் த.வெ.க.வின் முதல் மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தில் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
பாராலிம்பிக் மகளிர் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில், இந்திய வீராங்கனை அவனி லேகரா தங்கம் வென்றார். அதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலப் பதக்கம் வென்று இருவரும் சாதனை படைத்துள்ளனர்.