.jpg?w=320&auto=format%2Ccompress&fit=max)
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் திடீரென்று பரவிய காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறியுள்ளனர். நான்கு லட்சம் ஏக்கர் வனப்பகுதியில் பரவிய காட்டு தீயை அணைப்பதற்காக 5, 500 வீரர்கள் களமிறக்கப் பட்டுள்ளனர்.
யுபிஎஸ்சி தலைவராக இருந்த மனோஜ் சோனியின் பதவிக்காலம் முடிய ஐந்தாண்டுகள் இருந்த நிலையில், திடீரென சில நாள்களுக்கு முன் ராஜினாமா செய்தார். எனவே ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதிலிருந்து 2.73 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். அதேபோல் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் 'தமிழ் புதல்வன்' திட்டம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
விஷால் மற்றும் தனுஷ் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை மற்றும் தற்காலிக படப்பிடிப்பு நிறுத்தம் என தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் இந்திய வீராங்கனை ஶ்ரீஜா அகுலா வெற்றி பெற்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் வரலாற்றில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும் 2-வது இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையும் பெற்றார். பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 4-2 என்கிற செட் கணக்கில் சிங்கப்பூர் வீராங்கனையை வீழ்த்தியிருக்கிறார்.