அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க கூகுளுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் அடிப்படியில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 20 லட்சம் மாணவர்களுக்கு கூகுள் நிறுவனம் திறன் பயிற்சி வழங்க உள்ளது.
சுனிதா வில்லியம் மற்றும் புட்ச் வில்மோரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏற்றிச் சென்ற ஸ்டார்லைனர் போயிங் விண்கலம் வரும் 6-ம் தேதி பூமிக்குத் திரும்புகிறது என நாசா அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறால் 2 மாதங்களாக பூமிக்குத் திரும்ப முடியாத நிலையில், விண்வெளி வீரர்கள் இல்லாமல் விண்கலத்தை பூமிக்கு கொண்டு வர நாசா முயற்சி செய்து வருகிறது.
அனைத்து ரேசன் கடைகளிலும் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை செப்டம்பர் 5- ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுபெற்றதாக இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து விசாகப்பட்டினம் - கோபால்பூருக்கு இடையே இன்று நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் திரைப்படத்திற்கு 'Bomb' என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.