சுருக்குப்பை செய்திகள்(11.03.2024)

News
News
Published on

நாடாளுமன்ற தேர்தல்:

1. நாற்பதும் நமதே.... நாடும் நமதே... என்ற பெயரில் வெற்றி கூட்டணி தொடரும் என்று தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக போட்டியிட உள்ள தொகுதிகளில் நேற்காணலை நிறைவு செய்தார். தூத்துக்குடியில் வேறு யாரும் விருப்ப மனு அளிக்காதலால் கனிமொழி போட்டியிடுவது உறுதியானது.

2. எதிர்பாராத சக்திகளுக்கு சாதகமாகிவிடக்கூடாது என்பதற்காகவே திமுக கூட்டணியில் சேர்ந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் விளக்கம்.

3. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்ததில், மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

5. மக்களவை தேர்தலை ஒட்டி மது கடைகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம். மொத்தமாக மது விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்தல்.

6. அதிமுக வுடன் இழுபரி நீடித்த நிலையில் தேமுதிகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், பிரேமலதா விஜயகாந்த்தை பாஜக மேலிட பொறுப்பாளர்கள் இன்று சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல்.

7. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் என்று டெல்லி பயணம். அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபரிநீடிப்பதால் பாஜகவுடன் பேச்சு நடத்த பாமக திட்டம்.

போதை பொருள் கடத்தல்:

1. போதை பொருள் கடத்தலுக்கு திமுக, விசிகவினர் உடந்தையாக உள்ளனர் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றசாட்டு.

2. போதை பொருட்தொடர்பாக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

3. தமிழ்நாட்டில் போதை பொருளை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், போதை பொருள் குறித்து மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் ஆர் என் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4. போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிவர்த்தனையில் அவர் ஈடுபட்டதாக வழக்கு பதிவு .

தேர்தல் ஆணையர் பதவி விலகல்:

தேர்தல் ஆணையர் பதவி விலகியதன் பின்னணியில் பாஜக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு வைத்த பின்னணியில், தொடர்ந்து புதிய தேர்தல் ஆணையர் தேர்வு குறித்து பிரதமர் தலைமையிலான உயர்மட்ட குழு மார்ச் 15இல் ஆலோசனை நடத்த உள்ளது.

சினிமா :

1. சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை பெற்றது ஓபன்ஹெய்மர் திரைப்படம். சிறந்த நடிகர், துணை நடிகர், ஒளிப்பதிவாளர் என 7 பிரிவுகளில் விருதுகளை அள்ளியது. ஓபன்ஹெய்மர் பட இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. 7 முறை பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் முதன் முறையாக ஆஸ்கார் விருது வென்றார்.

இதையும் படியுங்கள்:
நோயாளிகளைப் பார்க்கும்போது சொல்லக்கூடாத விஷயங்கள் எவை தெரியுமா?
News

இதர செய்திகள்:

1. பட்டுக்கோட்டை அருகே நாடியம்மன் கோவில் மண்டலா பூஜை கோலாகலம். டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக 300க்கும் மேற்பட்ட பெண்கள் கோலாட்டம் ஆடி அசத்தல்.

2. மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலி 5 குட்டிகளை ஈன்றத்தை தொடர்ந்து, குனோவில் சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை 26ஆக உயர்வு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com