இந்த லிங்க்கை கிளிக் செய்யாதீர்கள்... புத்தாண்டு வாழ்த்து பெயரில் பரவும் மோசடி..!
நியூ இயர்,தீபாவளி பொங்கல் போன்ற விழாக்கள் வரும் போதுஏதேனும் ஒரு நிறுவனத்தில் இருந்தோ அல்லது தெரியாத நபர்களிடமிருந்தோ வாட்ஸப் மெசேஜ வந்து குவியும். அதிலும் இந்த மெசேஜை உடனடியாக 5 குழுவினர் அல்லது 10 நபர்களுக்கு அனுப்பினால் உங்களுக்கு 50 ஆயிரம் பரிசு என்று எளிதாக நம் மனதை கவரும் வகையில் அந்த மெசேஜஸ் இருக்கும்.
ஆசை யாரை விடும்? பலரும் இதை நம்பி பல குழுக்கள் மற்றும் உறவினர் நண்பர்களுக்கு இந்த மெசேஜ் அனுப்பி அதன் பின் அது கேட்கும் தகவல்களை கொடுப்பதும் உண்டு. ஆனால் இது சரியா? தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில் இது போன்ற விழாக்கால மெசேஜ்களில் நமது கவனத்தை அதிகப்படியாக வைப்பது நல்லது என்கிறது சைபர் க்ரைம்.
இங்கே whatsapp மெசேஜ் மோசடி குறித்து சிறு தகவல். நியூ இயர் வாட்ஸ்அப் மெசேஜ் வாழ்த்துக்கள் மூலமாக மோசடி நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது சமீப காலங்களில் அதிகரித்து வரும் online scam வகைகளில் ஒன்று என்கின்றனர் அதிகாரிகள்.
எப்படி இந்த மோசடிகள் நடக்கிறது?
லிங்க் உள்ள வாழ்த்து மெசேஜ் நமக்கு வரும். “Happy New Year 🎉 – இதை கிளிக் செய்யவும் என இருக்கும். அந்த லிங்க்கை கிளிக் செய்தால் → போலி வெப்சைட் திறக்கும். அதில் Gift / Cash Offer
“New Year Gift ₹999 – claim now” (தொகைகள் மாறுபடலாம் ) என அறிவித்து அதை அனுப்ப நமது ஏடிஎம் (UPI / Card Details)தகவல்கள் கேட்கப்படும்.
APK / App Download செய்து விட்டால் அவ்வளவுதான். அதாவது அவர்கள் அனுப்பும் “New Year Special App” Download செய்தால் உடனடியாக உங்கள் போன் ஹேக் (Phone Hack / Data Theft) செய்து தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு உண்டு.
அடுத்து WhatsApp Hack வழிமுறையில் OTP கேட்டு உங்கள் WhatsApp account கைப்பற்றப்படும்.
Forward Scam வழியாக“10 பேருக்கு அனுப்பினால் gift” என நமக்குத் தெரிந்தே டேட்டாக்கள் அவர்களுக்கு செல்லும்.இது (purely scam / data collection)
எப்படி இதிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்?
முதலில் பேராசை வேண்டாமே. அடுத்து மிக நெருங்கியவரே அனுப்பினாலும் தெரியாத link-களை click செய்யாதீர்கள். குறிப்பாக OTP, UPI PIN, Card details களை யாருக்கும் கொடுக்காதீர்கள். எவ்வகையிலும் APK / Unknown apps install செய்ய வேண்டாம். நம்பகமான பெரிய நிறுவனங்கள் பெயரில் மெசேஜ் வந்தாலும் அதை (Too good to be true offers) நம்பாதீர்கள். Phone-ல் Play Protect / Antivirus பயன்படுத்தலாம்.
சரி உண்மையான New Year Wishes எப்படி கண்டுபிடிப்பது?
எந்தவொரு Plain text / image / video Link இல்லாமல் உங்களுக்காகவே வரும் Personal message மட்டுமே உண்மை என தெரிந்து கொள்ளுங்கள்.
இதையெல்லாம் மீறியும் நீங்கள் தவறுதலாக லிங்க்கை கிளிக் செய்து தகவல்கள் திருடப்பட்டது போல் சந்தேகம் சிறிது வந்தாலும் உடனடியாக சைபர்கிரைமில் புகார் செய்யுங்கள். நீங்கள் தரும் புகாரால் மற்றவர்களும் பயன்பெறலாம்.
