தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடக்கிறது. அதற்கான வேலைகள் வியாழக்கிழமை தொடங்கிவிட்டன.
வேட்பாளர் ஆவதற்கு விண்ணப்பம் கொடுக்க, ஆகஸ்ட் 21 கடைசி நாள். அந்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 22-ஆம் தேதி தேர்தல் ஆணையம் சரிபார்க்கும்.
இதை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆளும் கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), தங்கள் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு அளித்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக எந்தப் பெயரும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், பல பெயர்கள் இந்தப் பதவிக்கு முக்கியமாகப் பேசப்படுகின்றன.
முன்னணி வேட்பாளர்கள் யார்?
ஹரிவன்ஷ் சிங்:
இவர் ஐக்கிய ஜனதா தளம் (JDU) கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.
2020 முதல் ராஜ்யசபாவின் துணைத் தலைவராக உள்ளார்.
இவர் மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் ஊடக ஆலோசகராகவும், ராஞ்சியில் இருந்து வெளியாகும் 'பிரபாத் கபார்' என்ற பத்திரிகையின் நீண்ட கால ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
2 .வி.கே. சக்சேனா:
தற்போது டெல்லியின் துணைநிலை ஆளுநராக இருக்கிறார்.
காங்கூர் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மற்றும் பயிற்சி பெற்ற விமானி.
2015-ல் காதி மற்றும் கிராமப்புறத் தொழில்கள் ஆணையத்தின் (KVIC) தலைவராகப் பொறுப்பேற்று, கைவினைஞர்களை மேம்படுத்தும் பல திட்டங்களைச் செயல்படுத்தியவர்.
2022-ல் டெல்லியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
3. மனோஜ் சின்ஹா:
இவர் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக இருந்து ஆகஸ்ட் 6 அன்று ஐந்து ஆண்டுகாலப் பதவிக் காலத்தை நிறைவு செய்தார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரான இவர், ரயில்வே துறையின் முன்னாள் இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, அங்கு ஒரு நிலையான சூழலை உருவாக்க உதவியதாக இவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
4. ஆச்சார்யா தேவ்ரத்:
தற்போது குஜராத் மாநில ஆளுநராக உள்ளார்.
2019-ல் இந்த பதவிக்கு வருவதற்கு முன், இமாச்சலப் பிரதேச ஆளுநராகவும் பணியாற்றினார்.
ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்த இவர், ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் உள்ள ஒரு குருகுலத்தில் முதல்வராகப் பணியாற்றிய அனுபவமும் உண்டு.
இந்தி மொழியில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலான கல்வி மற்றும் நிர்வாக அனுபவம் கொண்டவர்.